தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருதை வென்ற பின்னர், மிகவும் பரபரப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வந்தாலும், இவரை சுற்றி எப்போதும் ஏதாவது வதந்திகளும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
குறிப்பாக இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்ததால், கீர்த்தி சுரேஷ் துபாய் தொழிலதிபரான பர்ஹானை தான் நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சமூக வலைதளத்திலும், ஊடகங்களிலும் தகவல் தீயாக பரவியது.
கீர்த்தி சுரேஷை தொடர்ந்து தற்போது அவரின் தந்தை சுரேஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கீர்த்திகும் பர்ஹானுக்கும் திருமணம் என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. பர்ஹான் பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அந்தப் புகைப்படத்தை வாழ்த்து சொல்வதற்காக மட்டுமே பதிவிட்டார். கீர்த்திக்கு திருமணம் நிச்சயமானதும் நானே அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவேன். அதுவரை தயவு செய்து கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளார்.