ஷிவாங்கியின் எதார்த்தமான பேச்சு மற்றும் அவர் அனைவரிடமும் பழகும் விதம், இவரை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடிக்க வைத்தது. அதே போல் டான், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. கடந்த மூன்று சீசங்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, 'குக் வித் கோமாளி' நான்காவது சீசனில் குக்காக மாறினார்.