தளபதி விஜய்க்கு ஜோடியாக, 'சந்திரலேகா' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சுளா - விஜயகுமார் தம்பதிகளின் மூத்த மகள், வனிதா விஜயகுமார். பின்னர் ஒரு சில வருடங்களிலேயே ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டே மொத்தமாக விலகினார். 2 குழந்தைகள் பிறந்த பின்னர் ஆகாஷ் மற்றும் வனிதா இடையே வெடித்த பிரச்சனை விவாகரத்து வரை சென்றது. இதை தொடர்ந்து இரண்டாம் திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமார் அந்த வாழ்க்கையில் இருந்தும் விவாகரத்து பெற்றார்.
மேலும் தற்போது தன்னுடைய மகளுடன், வசித்து வரும் வனிதா... விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின், அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார்.
நான் திரைத்துறையில் காலடி வைத்த போது மிகவும் சிறிய பெண். அப்போது எனக்கு வயது 15. எனவே திரைத்துறையை பற்றி அவ்வளவாக நான் அப்போது அறிந்திருக்கவில்லை. இப்போது திரை துறையை நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். நடிப்பு தொழிலுக்கு வரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. திரைத்துறையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சிற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நல்ல வரவேற்பு எனக்கு உள்ளது என்று கூறினார்.