நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி உள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, தமன்னா, ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி, தனது மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற கேமியா ரோலில் நடிக்கிறார் ரஜினி. இதற்கு அடுத்தபடியாக ரஜினி நடிக்கும் படத்தை ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் படம் ஆகிய இரண்டையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
இதனிடையே அண்மையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார் ரஜினி, அதுதான் அவர் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுவதால், மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். முதலில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது புது டுவிஸ்ட் ஆக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் அப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
44
லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தை தயாரித்ததன் மூலம் நல்ல வருமானம் ஈட்டிய கமல், அதன்பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.21, விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படம், நெல்சன் - தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள படம், மணிரத்னம் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள படம் என வரிசையாக தயாரித்து வரும் கமல், தற்போது ரஜினியின் படத்தையும் தட்டிதூக்கி உள்ளது தான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.