விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. மேலும் இந்த படத்தின் இசையமைப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் விஜய் ஆண்டனி தான் மேற்கொண்டார். 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த மே 19ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியான நிலையில், ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.