சமந்தா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் சாகுந்தலம். குணசேகரன் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகை சமந்தா, சாகுந்தலையாக நடித்திருந்தார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் சமந்தா உடன் மலையாள நடிகர் தேவ் மோகன், தமிழ் நடிகை அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
நீலிமா குணா மற்றும் தில் ராஜு இணைந்து தயாரித்திருந்த இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்காக நடிகை சமந்தா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் செய்ததால், ரிலீசுக்கு முன் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகளவில் இருந்தது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. சுமாரான வி.எப்.எக்ஸ், தொய்வான திரைக்கதை இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன. வெளியான சில நாட்களிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட இப்படம் மொத்தமே ரூ.10 கோடிக்குள் தான் வசூலித்து இருந்தது. இதனால் இப்படத்திற்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய கெரியரில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்ததில்லை என தயாரிப்பாளர் தில் ராஜுவே வெளிப்படையாக கூறி இருந்தார்.