தீபாவளிக்கு வெளியான 'சர்தார்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர். 'சர்தார்' பட வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன், டைரக்டர் பி.எஸ்.மித்ரன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்: இயக்குனர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருது' கொடுத்த நித்தியானந்தா! ஏன் தெரியுமா?