அனிகாவை பார்ப்பதற்கு இவரா? இப்படி மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்கில் ஜொலிக்கிறார் என அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 17 வயதை எட்டியதுமே... ஹீரோயின் ஆசை தொற்றிக்கொண்டதால் என்னவே, அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற லெஹன்கா உடையில், அழகை வெளிப்படுத்திய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, அங்கு பல படங்களில் நடித்தாலும் பெயரையும், புகழையும் இவருக்கு பெற்று தந்தது என்றால் அது... அனிகா அஜித்துக்கு மகளாக நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம். இந்த படத்தில் த்ரிஷாவுக்கு மகளாக நடித்த அனிகா, மீண்டும் சிவத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் அஜித் - நயன்தாராவுக்கு மகளாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன்.. துணிவு பட லுக்கில் அஜித் கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் போட்டோஸ்!
இந்த படத்திற்கு பின்னர் இவரை, ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் மினிமேச்சர் என அழைக்க துவங்கி விட்டனர். அனிகாவும் சமீப காலமாக நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, அனிகா வெள்ளை நிற உடையில் தேவ லோக ரம்பை போல் கண்ணாடி முன் நின்றபடி, அமர்ந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே... கண்ணை கட்டும் அழகில் புகைப்படம் வெளியிட்ட அனிகா, ஹீரோயினாக அவதாரம் எடுத்து விட்டால், சொல்லவா வேண்டும்... நாளுக்கு நாள் கவர்ச்சியையும் கூட்டி வருகிறார் அனிகா.