Tamannaah : சேலையில் சொக்க வைக்கும் தமன்னா...சூப்பர் கூல் போட்டோஸ் இதோ

Published : Oct 25, 2022, 03:00 PM IST

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையுடன் தோன்றும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது....

PREV
16
Tamannaah : சேலையில் சொக்க வைக்கும் தமன்னா...சூப்பர் கூல் போட்டோஸ் இதோ
Tamannaah

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளிலும் அறியப்பட்ட முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இதுவரை 65 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். அதோடு சைமா, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளையும் தன் சொந்தமாக்கியுள்ளார் தமன்னா. 15 வயதில் பாலிவுட் மூலம் அறிமுகமான இவர் பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

26
Tamannaah

இதையடுத்து கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் தமன்னா.  இதில் கல்லூரி படம் இவருக்கு மிகப்பெரிய ஒப்பனிங்காக அமைந்தது. இந்த படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார் தமன்னா. 

36
Tamannaah

பின்னர் அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, கோ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார் தமன்னா. இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரேட்டிங் அதிகரித்துவிட்டது. முன்னணி நடிகையாகிவிட்ட தமன்னா பாகுபலியில் அவந்திகாவாக வந்து ரசிகர்களை கவர்ந்திருந்தால்.

46
Tamannaah

இவரது கவர்ச்சி மற்றும் வீரம் இரண்டுமே ரசிகர்களை வெகுவாகவே வியப்பில் ஆழ்த்தி இருந்தது. டாப் 10 நடிகையாகி விட்ட இவர் தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில்  ஹாரர் மூவியான பெட்ரமாக்ஸ் மற்றும் ஆக்சன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

56
Tamannaah

இதன் பிறகு தமன்னாவிற்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு எதுவுமே இல்லை இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என சென்றுவிட்டார். பாலிவுட் பக்கம் சென்றதால் முன்பை  விட அதிக கவர்ச்சி காட்டி தூள் கிளப்பி வருகிறார் தமன்னா.

66
Tamannaah

32 வயதுகளை கடந்து விட்ட தமன்னா தனது புகைப்படத்தால் தற்போதும் பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சேலையுடன் தோன்றும் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories