தமிழ் திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் அஜித், இந்த வருட தீபாவளியை குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி வெளியிட்டுள்ளார்.
அஜித் 'துணிவு' படத்தின் படப்பிடிப்பில் ஒருபுறம் கவனம் செலுத்தி வந்தாலும், மற்றொருபுறம் பைக் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம், விசேஷ நாட்களில் குழந்தைகள், குடும்பம் என ஆஜராகி விடுகிறார். சமீபத்தில், துணிவு பட பிடிப்பிற்காக படக்குழு தாய்லாந்து சென்ற போது, அங்கு அஜித் பைக் பயணத்தில் ஈடுபட்ட புகைப்பங்கள் சில வெளியாகி வைரலானது.
இதை தொடர்ந்து அஜித் நேற்று, தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அஜித் துணிவு பட லுங்கியில் மனைவியுடன் இருக்கிறார் இந்த புகைபடந்தை அஜித்தின் மச்சினிச்சி வெளியிட்டுள்ளார். மேலும் ஷாமிலி விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது, அஜித் இந்த தீபாவளி கொண்டாட்டத்தை, ஏதேனும் ஹோட்டலில் செலிப்ரேட் செய்துள்ளார் என தெரிகிறது. காரணம் அஜித் சில ரசிகர்களுடன் எடுத்து கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.