பிதாமகன் படம் மூலம் பிரபலமான சங்கீதா கிரிஷ். தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருக்கிறார். இவர் கட்கம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் உயிர், தனம் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இவரது கணவர் கிரிஷும் நடிகராவார். தங்கள் பிள்ளையுடன் இவர்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.