வேஷ்டி..சட்டையில் கலக்கும் கமல்ஹாசன்..மாஸ் காட்டும் உலகநாயகன்

Published : Oct 25, 2022, 11:03 AM IST

தீபாவளியை முன்னிட்டு பட்டு வேஷ்டி சட்டையில் கமல் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அன்றைய அழகு இன்னும் மாறவில்லை என கொண்டாடி வருகின்றனர்.

PREV
14
வேஷ்டி..சட்டையில் கலக்கும் கமல்ஹாசன்..மாஸ் காட்டும் உலகநாயகன்
kamal haasan

உலகநாயகன் கமலஹாசன் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6. பிஸியாக இருக்கிற இவர் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் படம் 400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. முந்தைய விக்ரம் படத்தின் சாயலாக வெளியான இதிலும் ரகசிய போலீஸ் ஆகத்தான் கமலஹாசன் தோன்றியிருப்பார்.

24
kamal haasan

இவரது நடிப்பு தற்போதைய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு நல்ல வசூலையும் குவித்தது. விஜய் சேதுபதி, பகத் பாஷில், இறுதியாக சூர்யா முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தையடுத்து இவர் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.

34
kamal haasan

பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த படம் பல இடையூறுகளுக்குப் பிறகு தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதன் வெளியீட்டு தேதி அறிவிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

44
kamal haasan

ஷங்கர் இயக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது கமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 யை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பட்டு வேஷ்டி சட்டையில் கமல் ஜொலிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அன்றைய அழகு இன்னும் மாறவில்லை என கொண்டாடி வருகின்றனர்.

click me!

Recommended Stories