கீர்த்தி சுரேஷ் தான் சூப்பர்..நடிகர் ராமராஜனின் ஓபன் டாக் 

Published : Oct 25, 2022, 10:39 AM IST

மகாநதி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளியிட்டு இருந்தார் என கீர்த்தி சுரேஷுக்கு புமகாநதி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளியிட்டு இருந்தார் என கீர்த்தி சுரேஷுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ராமராஜன். கழாரம் சூட்டியுள்ளார் ராமராஜன்.

PREV
15
கீர்த்தி சுரேஷ் தான் சூப்பர்..நடிகர் ராமராஜனின் ஓபன் டாக் 
ramarajan

70களின் பிற்பகுதிகள் திரை பயணத்தை துவங்கிய ராமராஜன் கிராமத்து நாயகராக மூன்று தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்திருந்தவர். இவர் நடிப்பில் வெளியான பல படங்களும் 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனைகளை புரிந்திருந்தது. 25 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது கரகாட்டக்காரன். அதோடு நான்கு திரையரங்குகளில் 400 நாட்கள் வரை ஓடி ராமராஜனுக்கு புகழை சேர்த்தது.

25
ramarajan

கலர் கலர் உடையில் மனதை கவர்ந்து வந்த ராமராஜன் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான கிராமத்து நாயகன் ஆவார். அப்போதைய ரஜினிகாந்த், கமலஹாசன் இவர்களைவிட அதிக படங்கள் மற்றும் அதிக நாட்கள் ஓடியது படங்க ராமராஜனின் படங்கள் தான். டவுசர் போட்டுக்கொண்டு நம்ம ஊரு பாட்டுக்காரன் ஆக அனைவரையும் கவர்ந்திழுத்து வைத்திருந்தார் ராமராஜன்.

35
ramarajan

உச்ச நட்சத்திரமாக ஜொலிச்சு வந்த இவர் 2012 இல் மேதை என்கிற படத்தில் தான் இறுதியாக நடித்திருந்தார். இதன் பின்னர் இவர் படங்களிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது சாமானியன் என்னும் படம் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கிறார் ராமராஜன். இந்த படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக இவர் நடிக்கிறார்.

45

சாமானியன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இவர்,  50 படங்கள் வரை ஹீரோவாக நடிப்பேன் என சூளுரைத்திருந்தார். இதுவரை எந்த நடிகரும் 50 படங்கள் வரை ஹீரோவாக மட்டும் நடிக்கவில்லை நான் நடித்துக் காட்டுவேன் என கூறியிருந்தார். அதோடு 100 கோடி கொடுத்தாலும் கதையில்லா படத்தில் நடிக்க நான் தரம் கெட்டவன் இல்லை என இவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

55

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இளம் கதாநாயகன் பற்றி பேசிய ராமராஜன், இப்போது இருக்கும்  நடிகைகள் எல்லோரும் நன்றாகத் தான் நடிக்கிறார்கள். சினிமாவில் நடிக்க நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும். சரோஜாதேவி, சாவித்திரி, கே ஆர் விஜயா போன்ற பலரையும் தனக்கு பிடிக்கும் ஏனென்றால் அவர் மகாநதி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளியிட்டு இருந்தார் என கீர்த்தி சுரேஷுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ராமராஜன். இது அவரின் ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories