தற்போது விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஒரே வண்ண உடையில் நால்வரும் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரது மகன் சண்முகபாண்டி நாயகனாக அறிமுகம் ஆகிவிட்டார், அவர் தற்போது மித்ரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு ஒரு பிள்ளை அரசியலுக்கு ஒரு பிள்ளை என விஜயகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள் விஜயகாந்த் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.