இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், தலைவர் 169 படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் ஒரு கம்பேக் கொடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.