இப்போது, இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, அக்ஷய் குமார் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.. சில நாட்களாக, பாலிவுட்டில் சூர்யா இந்த படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்று வதந்திகள் பரவி வந்தன. அவற்றை உண்மையாக்கும் வகையில் சூர்யா சமூக ஊடகங்களில் அக்ஷயுடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார்.