சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை புகழ்ந்த லிங்குசாமி

Kanmani P   | Asianet News
Published : Jun 15, 2022, 07:57 PM IST

ஓய்வெடுப்பதற்காக, இறுக்கமான கால அட்டவணைக்கு மத்தியில், சிம்புவின் ' விண்ணைத் தாண்டி வருவாயா'வை மீண்டும் பார்வையிட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

PREV
13
சிம்புவின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தை புகழ்ந்த லிங்குசாமி
Director Lingusamy

இயக்குனர் லிங்குசாமி தற்போது தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் 'தி வாரியர் ' படத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராம் பொதினேனி மற்றும் கிருத்தி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'தி வாரியர்' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக அயராது உழைத்து வருகிறார் இயக்குனர். இந்நிலையில் ஓய்வெடுப்பதற்காக, இறுக்கமான கால அட்டவணைக்கு மத்தியில் ' விண்ணைத் தாண்டி வருவாயா'வை மீண்டும் பார்வையிட முடிவு செய்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

23
Director Lingusamy

இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இறுதிப் பணியான #TheWarriorr இல் @menongautham #Vtv என்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவியது, இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எழுத்து, இசை மற்றும் காட்சியமைப்பில் அது என்ன ஒரு மேஜிக்கை உருவாக்குகிறது. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காதல் படங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். @trishtrashers & @SilambarasanTR_ அவர்களின் நடிப்பால் படம் முழுக்க காதலை சேர்த்திருந்தார்கள்..என எழுதியுள்ளார்.

33
the warrior

சிலம்பரசன் படத்தை இயக்குநர் லிங்குசாமி பாராட்டியிருப்பது, இருவரும் இணைவது குறித்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. 'தி வாரியர்' படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த 'புல்லட்' பாடலை சிலம்பரசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது , மேலும் அந்த பாடல் இசை மேடைகளில் வைரலானது.

Read more Photos on
click me!

Recommended Stories