30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'சுழல்-தி வோர்டெக்ஸ்'...

Kanmani P   | Asianet News
Published : Jun 15, 2022, 06:53 PM IST

30+ உலகளாவிய மொழிகளில் 'சுழல்-தி வோர்டெக்ஸ்' வெளியாவது குறித்து புஷ்கர் & காயத்ரி மற்றும் படக்குழு உற்சாகமாக இருக்கிறார்கள்.

PREV
13
30 மொழிகளில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'சுழல்-தி வோர்டெக்ஸ்'...
suzhal the vortex

புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி உருவாக்கப்பட்டது , ' சுழல் - தி வோர்டெக்ஸ்' கதிர் , ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். ட்ரைலரின் படி தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரத்தில் காணாமல் போன ஒரு பெண்ணை தேடும் போது, கண்டுபிடிக்கபடும் ஆச்சர்யம் நிறைந்த நிகழ்வுகளை தொகுத்து 8 எபிசோடாக உருவாக்கியுள்ளனர் படகுழுவினர்.  

23
suzhal the vortex

புஷ்கரும் காயத்ரியும் ரிலீஸுக்கு எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுகையில், “'சுழல்- தி வோர்டெக்ஸ்' கருத்தாக்கம் முதல் அது செயல்படுத்தப்படும் வரை பெரிய அளவிலான, பிரம்மாண்டமான திட்டமாக இருந்தது. நாங்கள் ஒரு யோசனை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கினோம், அது எப்படி எல்லாம் நடந்துள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உள்ளூர் கதையானது பிரைம் வீடியோவின் வரவுக்கு நன்றி. நாங்கள் தமிழில் ஆரம்பித்தோம், இப்போது 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் இது திரையிடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடருக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளோம். எங்கள் அன்பின் உழைப்பையும், அர்ப்பணிப்புள்ள குழுவின் கடின உழைப்பையும் உலகம் முழுவதும் காண நாங்கள் காத்திருக்கிறோம். எதிர்பார்ப்பு நம்மை பதட்டப்படுத்துகிறது, ஆனால் இது மிகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

33
suzhal the vortex

'சுழல்- தி வோர்டெக்ஸ்' இன்று இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெப் சீரிஸ்களில் ஒன்றாகும், மேலும் இந்த வெப் சீரிஸ் ஜூன் 17ஆம் தேதி 30+ உலக மொழிகளில் வெளியாகிறது. இது தமிழ் தொடர், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது. லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம், சீனம், செக், டேனிஷ், டச்சு, பிலிப்பைன்ஸ், ஃபின்னிஷ், கிரேக்கம், ஹீப்ரு, ஹங்கேரியன், இந்தோனேஷியன், கொரியன், மலாய், நார்வேஜியன் போக்ம், ருமேனியன், ரஷியன், ஸ்வீடிஷ், தாய்,உக்ரேனியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தத் தொடர் சப்டைட்டில்களுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories