விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வெளியானாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பது மட்டும் இன்றி, யார் யார் எப்படி பட்ட போட்டியாளர்கள் என்பதை துல்லியமாக கணித்து, அவர்களுக்கு தங்களுடைய சப்போர்ட்டை கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில், இன்றைய நிகழ்ச்சி எப்படி நடக்க போகிறது? யார் தொகுத்து வழங்குவார் என்கிற மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த உலக நாயகன் கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் அவரது உடல் நிலை நலமாக உள்ளதாக அவ்வப்போது அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது மருத்துவமனை நிர்வாகம். தற்போது கமல் மருத்துவமனையில் உள்ளதால் அவருக்கு பதில் இந்த இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார்? தொகுத்து வழங்குவார் என்கிற விஷயம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த லிஸ்டில் பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான 'ஸ்ருதி ஹாசன்', 'விஜய் சேதுபதி' ஆகியோர் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் பெயர் இணைந்துள்ளது.
இவர்களில் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறித்து, எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், கமல் மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது.
எப்போதும் சனி கிழமை நிகழ்ச்சியின் புரோமோ 12 மணிக்கே ரிலீஸ் செய்யப்பட்டுவிடும். ஆனால் இன்றைய தினம் 2 மணிக்கு மேல் ஆகியும் தற்போது வரை பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இன்றைய எபிசோட் குறித்து ரகசியம் காத்து வருகிறார்கள்.
கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதை ரகசியமாக வெளியிட தான் தற்போது வரை எவ்வித புரோமோவும் வெளியாகவில்லையா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மேலும் இன்று புரோமோ வெளியாகுமா? அல்லது ப்ரோமோ வெளியிடாமல் நேரடியாக நிகழ்ச்சி நடைபெறுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.