பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாத நாயகனாக அறியப்படும், சிம்பு நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த 'மாநாடு' திரைப்படம் 'அண்ணாத்த' ரிலீஸ் காரணமாக, நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தை வெளியிட பல்வேறு தடைகள் இருந்தது, கடைசி நேரத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னர், பிரச்சனைகள் சுமூகமாக முடிக்கப்பட்டு வெளியானது.
'விண்ணை தாண்டி வருவாயா' படத்திற்கு பின்னர், சும்மார் 11 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள 'மாநாடு' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வசூலிலும் கெத்து காட்டி வரும் நிலையில், திடீர் என இந்த படத்திற்கு எதிராக புதிய சிக்கலும் வந்துள்ளது.
அதாவது, மாநில பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள்... “மாநாடு படம் இந்து - முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது என்றும், பட விவகாரத்தில் முதலமைச்சர் தலையீடு செய்ய வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும்” என பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜெய்பீம் படத்தை தொடர்ந்து 'மாநாடு' படத்திற்கும் தற்போது புதிய சிக்கல் உருவாகியுள்ளது, சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் படக்குழுவினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.