Maanaadu Box Office: அடி தூள்... வசூலில் மாஸ் காட்டும் சிம்புவின் 'மாநாடு'! ஆச்சரியப்படுத்தும் 2வது நாள் வசூல்

First Published | Nov 27, 2021, 2:02 PM IST

எவ்வித விடுமுறையும் இல்லாத நாட்களில் வெளியானாலும், வசூலில் மாஸ் காட்டி வருகிறது சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் (maanaadu movie). முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார், 7 முதல் 8 கோடி வரை வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாள் வசூல் (2nd day maanaadu box office collection) குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கொரோனா பிரச்சனைக்கு பின் தமிழில் வெளியான மாஸ்டர், அண்ணாத்த மற்றும் கர்ணன் ஆகிய படங்களுக்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வசூலிலும் கெத்து காட்டி வருகிறது.

தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Tap to resize

வெங்கட் பிரபு படங்களின் சாயல் இந்த படங்களில் தெரிந்தாலும், அவை அனைத்துமே ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார்.

எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது.  இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.  

முதல் நாள் தமிழகத்தில் மட்டும் சுமார் 7 முதல் 8 கோடி வரை 'மாநாடு' படம் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாள் வசூலிலும் கெத்து காட்டியுள்ளது. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் இரண்டாவது நாளில் மாநாடு படம் 5 முதல் 6 கோடி வசூலித்துள்ளதாம்.

விடுமுறை அல்லாத நாட்களிலே நல்ல வசூலை 'மாநாடு' படம் ஈட்டி வரும் நிலையில், இனி வருவது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   

Latest Videos

click me!