Published : Aug 21, 2024, 09:52 PM ISTUpdated : Aug 22, 2024, 08:28 AM IST
'தங்கலான்' படம் குறித்து, எத்தனையோ விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், அதனை தவிர்த்து பா.ரஞ்சித்தின் ரவிக்கை காட்சி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி... திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் 'தங்கலான்'. சில சரித்திர உண்மைகளையும், வரலாறுகளையும் அடிப்படியாக கொண்டு, கற்பனை கதையோடு உருவாக்கப்பட்ட இந்த படம், ஒருதரப்பினர் மத்தியில் பாராட்டுகளை குவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
25
Jacket Scene
ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பழங்குடி மக்கள் முதல் முறையாக ரவிக்கை அணிந்து... அதனை வெளிப்படுத்தும் விதம் மற்றும் அந்த குறிப்பிட்ட காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே நெகிழ வைத்துள்ளது.
இந்த காட்சி குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர் "200 வருடங்களுக்கு முன்பான கதைக்களம். முதன்முதலாக ரவிக்கை அணிகிறார்கள். அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை இந்த காட்சி காட்டுகிறது.
45
Winning this scene
இதில் ஆபாசம் எங்கிருந்து வந்தது. இதில் வரும் வசனங்களை நம் தாத்தா பாட்டிகள் சாதாரணமாக பேசிக்கொள்வதை பார்த்ததே இல்லையா. அப்படிப் பார்க்கவில்லை என்றால் நீங்கள் சாதாரண சூழலில் வளரவில்லை என அர்த்தம். எனது பாட்டி உறவினர்கள் முன் வேடிக்கையாக அவருடைய மகளை " முலை திருடி " என பேசி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் எனது அத்தை குழந்தையாக இருந்த போது தூங்கும் போது தெரியாமல் தாய்ப்பால் குடித்து விடுவாராம். இது போன்ற வார்த்தைகள் அந்த கால மக்களின் வட்டார வழக்கு.
இது உங்களுக்கு ஆபாசமாக தெரிந்தால் நீங்கள் சமுதாயக் கல்வியை ஆழமாக பெற வேண்டும். இயக்குனர் பா ரஞ்சித்தின் மேல் எனக்கு விமர்சனங்கள் பல உண்டு. ஆனால் இந்த காட்சி மிகவும் அழகாக உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. என கூறி (பின்குறிப்பு: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரக்கூடிய அந்த உடை ஆபரணங்களை சாமானிய மக்கள்யாரும் அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உடைகளை பார்த்து பெருமிதம் அடைய வேண்டாம் அது வெறும் கற்பனையே என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பல ரசிகர்கள் அந்த ஒரே ஒரு காட்சி... மனதில் எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளனர். இந்த காட்சியில் விக்ரமின் நடிப்பு, பார்வதி நடிப்பை தாண்டி.... அதில் நடித்திருந்த அனைவரின் நடிப்புமே பாராட்ட தக்க ஒன்று.