Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்

First Published | Aug 19, 2023, 8:08 PM IST

வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறும் நடிகர் விஜய்க்கு கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் தளபதி விஜய் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், அஜித் குமாரின் துணிவு படத்துடன் மோதியது.

வாரிசு படம் ரிலீசாகி கலைவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும் வாரிசு திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்தது என்று கூறப்பட்டது. இப்படம் கேரளாவில் ரூ.13 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக வெளிவந்தது.

Tap to resize

தற்போது தளபதி விஜய்க்கும், வாரிசு படக்குழுவுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் வாரிசு செய்த வசூல் என்ற பட்டியல் உண்மையான வசூல் இல்லை என கூறி கேரளா விநியோகஸ்தர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

வாரிசு திரைப்படம் கேரளாவில் ரூ. 6.83 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார் அவர். விஜய்யின் வாரிசு படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக   கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர்  நடிகர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ‘வாரிசு படம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையைத் திரும்ப தரும்படி’ அதில் குறிப்பிட்டுள்ளார். வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் படத்துக்காக தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறும் நடிகர் விஜய்க்கு கேரளாவைச் சேர்ந்த ராய் அகஸ்டின் என்ற விநியோகஸ்தர் கடிதம் எழுதியுள்ளார்.

தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் லியோ படத்துக்கு இதனால் சிக்கல் ஏற்படுத்தி விடுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ பார்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. எப்போ தெரியுமா?

Latest Videos

click me!