அடேங்கப்பா... “மாஸ்டர்” பட ஒட்டுமொத்த விற்பனை இத்தனை கோடியா? ... பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்த விஜய்...!

First Published Jan 6, 2021, 5:59 PM IST

 “மாஸ்டர்” படத்தின் ஒட்டுமொத்த விற்பனையை கேட்டு தான் கோலிவுட்டே ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறது

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.
undefined
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் வெளியாக உள்ள மாஸ் ஹீரோ படம் என்பதால் மக்கள் கூட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 700, கர்நாடகாவில் 100, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 400, வட இந்தியாவில் 1000, வெளிநாட்டில் 1000 என மொத்தம் 3500 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
undefined
300 கோடி லாபத்தை எட்டிய பிகில் படத்திற்காக விஜய் 50 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், மாஸ்டர் படத்தில் நடிக்க 80 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் உட்பட படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 180 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
படத்தின் ஒட்டுமொத்த விற்பனையை கேட்டு தான் கோலிவுட்டே ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறது. தமிழ்நாட்டில் 70 கோடி, ஆந்திராவில் ரூ.9 கோடி, கேரளாவில் ரூ.7 கோடி, வெளிநாட்டு விற்பனை உரிமை ரூ.30 கோடி, டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை ரூ.25 கோடி, ஓடிடி விற்பனை ரூ.20 கோடி மற்றும் இசை உள்ளிட்ட இதர வருமானங்கள் மூலம் 5 கோடி என மொத்தமாக ரிலீஸுக்கு முன்பே மாஸ்டர் திரைப்படம் 2000 கோடி வரை கல்லா கட்டிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது.
undefined
click me!