இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி பலரும் அறியாத உண்மைகள்... சுவாரஸ்யமான 10 தகவல்கள் இதோ...!

First Published Jan 6, 2021, 5:05 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி யாரும் பெரிதாக அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இதோ... 

அப்பாவின் மூலம் ஏ.ஆர்.ரகுமானுக்கு சின்ன வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தாலும், அவர் கனவு கண்டது என்னவோ கம்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று தான்.
undefined
தந்தையின் மறைவிற்கு பிறகு குடும்பம் கடினமான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எனவே இளம் வயதிலேயே ரூட்ஸ் என்ற ஒரு சிறிய இசைக்குழுவில் கீபோர்ட் ப்ளேயராக இணைந்த ரகுமான், பிரபல ட்ரம்மர் சிவமணி மற்றும் அவரது நண்பர்கள் ஜான் ஆண்டனி, சுரேஷ் பீட்டர்ஸ், ஜோஜோ மற்றும் இளையராஜா ஆகியோரிடம் பணியாற்றியுள்ளார்.
undefined
இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வயதில் காத்ரி என்ற மதகுருவின் வழிகாட்டுதலின் படி திலீப் குமார் ஏ.ஆர்.ரஹ்மானாக மதம் மாறினார்.
undefined
கனடா நாட்டின் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரகுமானின் பெயரை சூட்டப்பட்டுள்ளது. அல்லா ரக்கா ரஹ்மான் என்பதே ஏ.ஆர்.ரகுமான் என்பதன் சுருக்கமாகும்.
undefined
பழையதை எப்போதும் மறக்காதவர் ஏ.ஆர்.ரகுமான்.தான் வாசித்த முதல் கீபோர்டை இப்போதும் பராமரித்து வருகிறார்.
undefined
பல விளம்பர படங்களுக்கு இசையமைத்த ரகுமான், 1991-ல் லியோ காபி விளம்பரத்துக்கு போட்ட மெட்டுக்கு அவார்ட் வாங்கினார். அந்த விருது வழங்கும் விழாவில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்திக்க ரகுமானுக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தது.
undefined
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் திரைப்படம் 'யோதா' என்ற மலையாள திரைப்படம்.ஆனால் முதலில் ரிலீஸ் ஆகியது ‘ரோஜா’ தான். ஆனால் ரோஜா படத்தின் கேசட்டில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இருக்காது.
undefined
பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ரஹ்மான், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில், ஆக்ஸ்வர்ட் பல்கலைகழகத்தின் ஸ்காலர்ஷிப் மூலம் வெஸ்டர்ன் கிளாசிக் மியூசிக்கில் பட்டம் பெற்றுள்ளார்.
undefined
தற்போது உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளராக மாறிய பிறகும் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலில் வாங்கிய சம்பளம் வெறும் 50 ரூபாய். தன்னுடைய சின்ன வயதில் ரெக்கார்ட் பிளேயர்களை இயக்கியதற்காக அவருக்கு அந்த சம்பளம் கிடைத்தது.
undefined
ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவருடைய மகன் ஏ.ஆர்.அமீனுக்கும் ஒரே நாளில் தான் பிறந்தநாள்.
undefined
click me!