சோசியல் மீடியாவில் இல்லாத பிரபலங்களை கூட இருப்பது போல் போலி கணக்குகளை உருவாக்கி அவருடைய ரசிகர்களை குழப்பம் சம்பம் தற்போது அதிக அளவில் அரங்கேறி வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போலி ஆசாமிகளுக்கு அஞ்சியே பல திரைநட்சத்திரங்களும் சோசியல் மீடியாவில் இருக்கிறோமா? இல்லையா? என விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த வரிசையில் தளபதி விஜய்யின் வாரிசுகளான மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷாவின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஜேசன் சஞ்சய் கனடாவின் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார், திவ்யா பள்ளியில் படித்து வருகிறார்.
இருவரும் படிப்பில் பிசியாக இருக்கும் இந்த சமயத்தில் ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோரது பெயரில் ட்விட்டர் கணக்குகள் செயல்பட்டு வருகிறது. அதனை மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் பின்பற்றியும் வருகின்றனர். இதுவரை யாருமே பார்த்திடாத புகைப்படங்கள் அந்த கணக்குகளில் பகிரப்படுவதால் அது உண்மையாவே ஒரிஜினல் அக்கவுண்ட் தான் என ரசிகர்கள் நினைத்து வந்தனர்.
தனது மகன் ஜாசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா இருவரும் எந்த வித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும், ரசிகர்கள் இதுபோன்று போலியான கணக்குகளை நம்ப வேண்டாம் என்றும் தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது