இயக்குனர் வம்சிக்கு என்னாச்சு? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் நிறுத்தம்

First Published | Sep 20, 2022, 11:38 AM IST

varisu : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் வம்சி தானாம். 

தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வாரிசு. தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியவரும், பிரபல தெலுங்கு பட இயக்குனருமான வம்சி தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

வாரிசு படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை சென்னையில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்புகளை ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தற்போது 100 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படியுங்கள்... மீண்டும் இணையும் கில்லி ஜோடி... ‘தளபதி 67’ குறித்து முதன்முறையாக பேசிய நடிகை திரிஷா

Tap to resize

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாரிசு படத்தின் ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இயக்குனர் வம்சி தானாம். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாராம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறாராம்.

அவர் உடல்நலம் தேறி வந்த பின்னர் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வாரிசு படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். வருகிற தீபாவளி பண்டிகையன்று வாரிசு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் மூதாட்டிக்கு ‘தாய் பூமி’ விருது - கமல்ஹாசன் வழங்கினார்

Latest Videos

click me!