105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் மூதாட்டிக்கு ‘தாய் பூமி’ விருது - கமல்ஹாசன் வழங்கினார்

First Published Sep 20, 2022, 10:01 AM IST

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடத்தப்பட்ட மகளிர் சாதனையாளர் விருது விழாவில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயது மூதாட்டிக்கு தாய் பூமி என்கிற விருது வழங்கப்பட்டது.
 

சிறுவயதில் இருந்தே சினிமாவில் பயணித்து வரும் நடிகர் கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலிலும் எண்ட்ரி கொடுத்தார். இவர் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராகவும் இருந்து வருகிறார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார் கமல்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக களமிறங்கிய கமல் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்வியை சந்தித்தாலும், தொடர்ந்து அரசியல் பணிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்... பட வாய்ப்பின்றி கஷ்டப்பட்ட நடிகர் கூல் சுரேஷுக்கு சிம்பு கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு - எந்த படத்தில் தெரியுமா?

அந்த வகையில் சாதனைப் பெண்களை கவுரவிக்கும் வகையில், மகளிர் சாதனையாளர் விருது விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் சமீபத்தில் கோவையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனும் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக திகழ்ந்து வரும் பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதில் கோவை தேக்கம்பட்டியை சேர்ந்த பாப்பம்மாள் என்கிற 105 வயது மூதாட்டிக்கு தாய் பூமி என்கிற விருது வழங்கப்பட்டது. இந்த வயதிலும் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வரும் பாப்பம்மாளை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு இவ்விருதை வழங்கினார்.

இதையும் படியுங்கள்... கணவரின் முதல் திருமணத்தின் போது குழந்தையாக இருந்த நடிகைகள் யார்... யார் தெரியுமா?

click me!