தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா. 96 படத்தின் வெற்றிக்கு பின்னர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா.
அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை திரிஷாவிடம், அவர் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்டு சிரித்த திரிஷா, இது பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி என்பதால், அது சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பேன் என சொல்லிவிட்டார். இதில் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்காததால், அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லப்படுகிறது.
தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் மும்பையை சேர்ந்த தாதா கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதில் ஒன்று சமந்தா மற்றொன்று திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..