அஜித்தின் துணிவு படத்துக்கு போட்டியாக வாரிசு படம் ரிலீஸ் ஆவதால், வசூலில் யார் வெற்றிவாகை சூடப்போவது என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் முன்பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.