உலகின் முன்னணி தேடுபொறி தளமாக கூகுள் இருந்து வருகிறது. நமக்கு ஏதேனும் ஒரு தகவல் தேவைப்பட்டால் நாம் முதலில் நாடும் இடமாக கூகுள் இருந்து வருகிறது. அப்படி உலகம் முழுவதும் பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி வரும் கூகுள், ஆண்டு இறுதியில் சில தரவுகளை வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவுகளை தற்போது வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதில் ஒரே ஒரு தமிழ் படம் தான் இடம்பெற்று இருந்தது. அதும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தான் இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்நிலையில் தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... 56 வயது முரட்டு சிங்கிள் நடிகரின் காதல் வலையில் சிக்கிய பூஜா ஹெக்டே..? தீயாய் பரவும் தகவல்
அதன்படி இந்த பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தான் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் இரண்டாம் இடத்தில் உள்ளது. விஜய்யின் பீஸ்ட் மற்றும் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி ஆகிய படங்கள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.