செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த படம் கட்டா குஸ்தி. இப்படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது. தமிழில் கட்டா குஸ்தி, தெலுங்கில் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ரிலீசான இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருந்தார்.
24
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால், இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததற்காக தனக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதாக கூறினார். அதோடு தான் விவி ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு தான் என கூறினார்.
44
தற்போது வெளியாகி உள்ள கட்டா குஸ்தி திரைப்படம் இதுவரை ரூ.30 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி உள்ளதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு எஃப்.ஐ.ஆர் மற்றும் கட்டா குஸ்தி என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த என பிசினஸ் இல்லை எனக்கூறி இதுவரை 9 படங்கள் டிராப் செய்யப்பட்டது என்கிற அதிர்ச்சி தகவலை சொன்ன விஷ்ணு விஷால், தற்போது தன் கைவசம் 9 படங்கள் உள்ளது என நினைக்கும் போது பெருமையாக உள்ளது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் லால் சலாம் என்கிற படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.