மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படம் பிளாப் ஆனதால் டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். முகமூடி படத்தின் தோல்விக்கு பின் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.
மேலும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. இதுதவிர சல்மான் கான் தயாரிப்பில் மேலும் இரண்டு இந்தி படங்களிலும் நடிக்க பூஜா ஹெக்டே கமிட் ஆகி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து பூஜா ஹெக்டேவுக்கு சல்மான் கான் வாய்ப்பு அளிப்பதற்கு காரணம் அவர்மீது ஏற்பட்ட காதல் தான் என பாலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.