நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. இதனால் படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
24
துணிவு ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்ததால் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மறுபுறம் வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தை பேமிலி ஆடியன்ஸ் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இதனால் இப்படம் வசூலில் லீடிங்கில் உள்ளது.
துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலகளவில் ரூ.200 கோடி கலெக்ஷனை கடந்துள்ளது. விஸ்வாசம், வலிமை படங்களுக்கு பின்னர் ரூ.200 கோடி கலெக்ஷனை அள்ளிய அஜித்தின் மூன்றாவது படம் துணிவு. அதேபோல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ.250 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
44
குறிப்பாக விடுமுறை தினமான நேற்று வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்தை விட டபுள் மடங்கு கலெக்ஷனை அள்ளி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், துணிவு திரைப்படம் ரூ.4.5 கோடி மட்டுமே வசூல் ஈட்டி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.