ரஜினி மகளுடன் சண்டையா?... ஷூட்டிங் தொடங்கும் முன்பே ‘லால் சலாம்’ படத்திலிருந்து திடீரென விலகிய பிரபலம்

Published : Jan 22, 2023, 03:21 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அப்படத்தில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

PREV
14
ரஜினி மகளுடன் சண்டையா?... ஷூட்டிங் தொடங்கும் முன்பே ‘லால் சலாம்’ படத்திலிருந்து திடீரென விலகிய பிரபலம்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் வெளியான தனுஷின் 3 படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். ரிலீஸான சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத இப்படம் அண்மையில் தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

24

3 படத்தை தொடர்ந்து வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. சூதாட்டத்தை பற்றிய இப்படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் தனுஷ் கொக்கி குமார் என்கிற கேமியோ ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இப்படம் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

34

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இயக்குனராக மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. அவர் புதிதாக இயக்க உள்ள திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார். இப்படத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.

லைகா நிறுவனம் தயரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லால் சலாம் படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது. இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... கோவையில் சிங்கப்பெண்களுக்காக திரையிடப்பட்ட ‘வாரிசு’ ஸ்பெஷல் ஷோ... ஆட்டம் பாட்டம் என அதகளப்படுத்திய வீடியோ இதோ

44

இந்நிலையில், லால் சலாம் படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா டுவிட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது : “ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் லால் சலாம் படத்தில் இனி பணிபுரியப்போவதில்லை. இனி வரும் போஸ்டர்களில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள்” என குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் லைகா நிறுவனத்தின் டுவிட்டர் பக்கங்களை டேக் செய்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், பூர்ணிமாவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தோழிகளாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  என் புருஷன் பிரேம்ஜி கூட மீண்டும் சேர்ந்துட்டேன்.. நெருக்கமாக இருக்கும் போட்டோவுடன் பாடகி போட்ட ஷாக்கிங் பதிவு

Read more Photos on
click me!

Recommended Stories