என் புருஷன் பிரேம்ஜி கூட மீண்டும் சேர்ந்துட்டேன்.. நெருக்கமாக இருக்கும் போட்டோவுடன் பாடகி போட்ட ஷாக்கிங் பதிவு

Published : Jan 22, 2023, 01:57 PM IST

பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி ஒருவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
14
என் புருஷன் பிரேம்ஜி கூட மீண்டும் சேர்ந்துட்டேன்.. நெருக்கமாக இருக்கும் போட்டோவுடன் பாடகி போட்ட ஷாக்கிங் பதிவு

நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன். இவரது மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சென்னை 28 மூலம் தொடங்கிய இவரது திரைப்பயணம், தற்போது மாநாடு வரை மாஸாக சென்று கொண்டிருக்கிறது.

24

மறுபுறம் பிரேம்ஜி தன் தந்தையை போல் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு வயது 40-ஐ கடந்த விட்ட போதிலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். பேட்டிகளிலும் திருமணம் நடக்கும் போது நடக்கும் என கூலாக பதிலளித்து வருகிறார் பிரேம்ஜி.

இதையும் படியுங்கள்... ஷாருக்கான் யாருன்னே தெரியாதுனு சொன்ன அசாம் முதல்வருக்கு... நள்ளிரவில் போன் போட்டு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்

34

இந்நிலையில், பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதன் பின்னணியின் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்கிற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதனை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

44

இதைப்பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், என்னது பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆயிடுச்சா என பதிவிட்டு வருகின்றனர். பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்களா என்றும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா என்பதை அவர்கள் இருவரும் சொன்னால் தான் உண்மை தெரியவரும்.

இதையும் படியுங்கள்... முடிகிறது பிக்பாஸ் சீசன் 6... சர்ச்சைகளும், சாதனைகளும் நிறைந்த இந்த சீசனின் முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories