பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. சந்தோஷ் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக ஜான் அபிரஹாம் நடித்திருக்கிறார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதனிடையே பதான் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். அந்த பாடலின் வீடியோ வெளியானபோது அந்தக் காட்சி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் அதை நீக்கக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.