நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவினாலும், அதற்கு முன் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்ஷன் அள்ளி சாதனை படைத்ததால் அவரது மார்க்கெட் ஏறுமுகத்துடனே சென்று கொண்டிருக்கிறது.
24
அயலான் எனும் பான் இந்தியா படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
44
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.