தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதமாக வாரிசு மற்றும் துணிவு படங்களைப் பற்றிய பேச்சு தான் அதிகளவில் இருந்துள்ளது. ரிலீசுக்கு பின்னும் அந்த இருபடங்களைப் பற்றிய பேச்சுக்கள் குறைந்தபாடில்லை. தற்போது வசூலில் யார் நம்பர் 1 என்கிற போட்டியும் ஒருபக்கம் நிலவி வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய்யும், அஜித்தும் தங்களது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், பொங்கல் ரேஸில் நேருக்கு நேர் மோதிய விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், வாரிசு படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.
இந்த இரண்டு படங்களும் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.75 கோடிக்கும், துணிவு படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.65 கோடிக்கும் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா! உறுதி செய்த சன் பிக்ச்சர்ஸ்!