தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் தமிழில் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே தமிழ் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார்.
முன்னணி நடிகையாக இருக்கும் போதே தன்னுடைய நீண்ட நாள் காதலரான கௌதம் கிச்சுலு என்பவரை, கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தன்னுடைய குழந்தை பிறந்து 9 மாதங்கள் ஆனதை புகைப்படம் வெளியிட்டு காஜல் அகர்வால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், கடவுள் உங்கள் மூலம் செய்யும் எல்லா காரியங்களையும் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது. இதற்கிடையில் நீ பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிறது என தன்னுடைய மகனுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.