ambani family
இந்திய அளவில் டாப் 5 பணக்காரர்களில் ஒருவரும், இந்திய வர்த்தகத்தில் முன்னணியாக இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரும், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது.
இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் கையில் ஏந்தி கொஞ்சிய ராதிகா மெர்ச்சன்ட் - ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து அங்கு கூடி இருந்த செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர், உள்ளே சென்றார். பின்னர் தன்னுடைய குடும்ப உறவினர்களை கட்டி அனைத்து, அன்பு பாராட்டிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பச்சை நிற கிராண்ட் சல்வார் சூட்டில்... மகளுடன் இருக்கும் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் பட விழாவின் போது கொஞ்சம் குண்டாக காணப்பட்ட ஐஸ்வர்யா ராய், தற்போது மெலிந்து காணப்படுகிறார். அந்த புகைப்படங்கள் இதோ...