அனிருத் இல்ல... தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிப் பாடலை கம்போஸ் பண்ணியது யார் தெரியுமா?

First Published | Aug 22, 2024, 7:31 AM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடிப் பாடலை இசையமைத்துள்ள இசையமைப்பாளர் யார் என்கிற விவரம் வெளியாகி உள்ளது.

TVK party flag anthem

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் ஆன்லைன் வாயிலாக அந்த கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதில் 75 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதனிடையே கட்சியின் கொடி அறிமுக விழா இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

Tamilaga Vettri Kazhagam

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது கட்சி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தை பார்வையிட்ட நடிகர் விஜய், அதில் கொடி ஒன்றையும் ஏற்றிப் பார்த்தார். அந்தக் கொடி மஞ்சள் நிறத்தில் இருந்தது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் மஞ்சள் முக்கிய பங்காற்றும் என்பது உறுதியாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த கொடி அறிமுக விழாவை ஒட்டி அதற்காக கம்போஸ் செய்யப்பட்ட சிறப்பு பாடலையும் வெளியிட உள்ளனர்.

இதையும் படியுங்கள்... நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தளபதி விஜய் பரபரப்பு அறிக்கை!

Tap to resize

TVK Vijay

விஜய் கட்சிக்கு அந்தப்பாடலை கம்போஸ் செய்தது யார் என்கிற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்துள்ளதாகவும், பாடலாசிரியர் விவேக் அதன் வரிகளை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாரிசு படத்தில் இந்த காம்போவில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் போல் ஒரு அனல் பறக்கும் பாடலை தமிழக வெற்றிக் கழகத்திற்காக அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thaman

இசையமைப்பாளர் தமன் இப்படி அரசியல் கட்சிக்கு பாடல் கம்போஸ் செய்வது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னரே கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவரும், தற்போதைய ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் கட்சி ஆரம்பிக்கும் போது, அக்கட்சிக்கான ஆந்தம் பாடலை தமன் தான் இசையமைத்து இருந்தார். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை போல் தவெக கட்சி பாடலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அண்ணே வரார் வழி விடுங்கோ... சுடசுட வெளியான 'GOAT' சென்சார் அப்டேட்!

Latest Videos

click me!