Thalapathy 66 : ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Published : May 09, 2022, 08:33 AM IST

Thalapathy 66 : தளபதி 66 படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட படக்குழு அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.  

PREV
14
Thalapathy 66 : ‘தளபதி 66’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான தோழா படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், தற்போது 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்கி வருகிறார். நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் அப்படத்தை தற்காலிகமாக தளபதி 66 என அழைத்து வருகின்றனர்.

24

தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவர் நடிகர் விஜய்யுடன் நடிப்பது இதுவே முதன்முறை. இதுதவிர நடிகர் ஷியாம் விஜய்க்கு சகோதரராகவும், நடிகர் யோகிபாபு நகைச்சுவை வேடத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

34

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்த படக்குழு, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி வருகிறது. இது குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த எமோஷனல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது.

44

இந்நிலையில், தளபதி 66 படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தனர். மேலும் அத்துடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி தளபதி 66 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... RC 15 Update : வாரிசு நடிகைக்கு வாய்ப்பளித்த ஷங்கர்... RC 15 படத்தில் இணைந்த முன்னணி ஹீரோயின் யார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories