பீஸ்ட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் 66 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்துள்ளார் விஜய்.
28
Thalapathy Vijay
தெலுங்கில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆக இருக்கும் தில் ராஜூ இந்த படத்தை உருவாக்கி வருகிறார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா கமிட்டாகியுள்ளார்.
38
thalapathy 66
இவர்களுடன் பிரபல நாயகன் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
48
Thalapathy Vijay
முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்டாக உருவாகும் இந்த படத்தில் இரண்டு அண்ணன்களுக்கு தம்பியாக விஜய் நடிப்பதாகவும், சரத்குமார் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
58
Thalapathy Vijay
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
68
Thalapathy Vijay
ஐதராபாத்தில் விறுவிறுப்பாக 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
78
Thalapathy Vijay
இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் உள்ளன. அதன் படி இதில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.
88
vijay 66
முன்னதாக இந்த படத்தில் பிரபு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரகாஷ்ராஜை இந்த படத்தில் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.