Thalapathy
கோலிவுட்டின் பிளாக் பஸ்டர் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். வீட்டில் சுட்டிக் குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை விஜய்யை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
Thalapathy
ரசிகர் மன்றமாக மட்டுமில்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதை உணர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு பேரிடர் காலங்களில் சமூக சேவையாற்றிய வருகின்றனர்
Thalapathy
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது களத்தில் இறங்கி சேவையாற்றினர். இதுமட்டுமின்றி வெள்ளம், புயல் என தமிழகம் பேரிடர் காலங்களை சந்தித்த பல்வேறு சமயங்களிலும் விஜய் ரசிகர்கள் மக்களோடு மக்களாக இறங்கி சேவையாற்றியுள்ளனர்.
Thalapathy
விஜய் பட அப்டேட் வெளியானால் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடுவது முதல் தளபதியை பற்றி தப்பாய் பேசினால் சோசியல் மீடியாவில் கண்டன குரல் எழுப்புவது வரை தளபதி ரசிகர்கள் வேற லெவல்.
Thalapathy
இன்று தன்னுடைய அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான ஆலோசனை கூட்டத்திற்காக அனைவரும் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வரும் படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
Thalapathy
இன்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு அவரது ரசிகர்கள் விஜய்க்கு முழு உருவ சிலை வைத்து கொண்டாடியுள்ளனர். இதனை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
மாஸ்டர் பட கெட்டப்பில் தளபதி விஜய்க்கு முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.