Yashika anand
தமிழில் ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமானார்.
Yashika anand
நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
Yashika anand
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Yashika anand
இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Yashika anand
இந்நிலையில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாஷிகாவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், டெல்லியில் இருந்து சென்னை விரைந்துள்ளதாகவும் யாஷிகாவின் தந்தை தெரிவித்துள்ளார். யாஷிகா விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென பிராத்திப்பதாக சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றன