கணவர் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பூஜா, அவருடைய வேம்புலி என்ற அவரது பயணத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நான் ஜானின் வாழ்க்கையை கிட்டத்தட்ட வாழ்ந்திருக்கிறேன். அவரது கடுமையான வொர்க்அவுட் அதன் மூலம் அவர் தாங்கிய உடல் வலியைத் தவிர, மீதமுள்ள பகுதிகளில் நான் இருந்தேன். அவர் இந்த படத்தில் கையெழுத்திட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஏனெனில் பா.ரஞ்சித் போன்ற இயக்குனருடன் பணிபுரிவது நிச்சயமாக ஒரு நடிகரின் வாழ்க்கையில் ஒரு மைல்கல் என மிக நீளமான பதிவு ஒன்றை போட்டு கணவரை பாராட்டித் தள்ளியுள்ளார்.