சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள கபெ ரணசிங்கம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ட்ரைலரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
4 பாட்டுக்கு ஆடினோமா, ஹீரோவோடு 2 ரொமான்ஸ் சீன்களில் தலை காட்டினோமா என்றில்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்ததே அதற்கு சாட்சி.
aishwarya rajesh
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
Ranasingam
சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் வெளிநாட்டில் இறந்த கணவனது உடலை கொண்டு வர போராடும் சாமானிய பெண்ணின் வலிகளை கண்முன் காட்டி மிரளவைத்தார்.
இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காமல் இருந்த இவர், முதல் முறையாக அதிரடியான ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'.
தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் ஜூலை 30ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
என்ன தான் நடிப்பில் கெட்டியாக இருந்தாலும் சினிமாவில் தொடர கவர்ச்சி முக்கியம். எனவே சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த அளவிற்கு நடிப்பில் கவனமாக இருக்கிறாரோ? அந்த அளவிற்கு சம்பளத்திலும் கறார் என்ற பேச்சு உண்டு.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் கனா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் மக்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த படங்களின் வெற்றியால் தான் என்னுடைய சம்பளமும் உயர்ந்துள்ளது. ஆனால் என் முதல் நோக்கம் எப்போதுமே சம்பளம் கிடையாது. நல்ல கதை என்றால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள தயார் என உண்மையை போட்டுடைத்து, தான் சம்பளத்தில் கறார் கட்டும் நடிகை கிடையாது என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.