முன்னணி நடிகர்கள் பிறந்தநாள் என்றாலே அவரது ரசிகர்கள் அதனை ஒரு வாரத்திற்கு முன்பே கொண்டாட துவங்கி விடுவார்கள். அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்துக்கு முன்பே காமன் டிபி வெளியிட்டு வரவேற்ற நிலையில், நேற்றைய தினம் பல மக்களுக்கு அன்னதானம், காய்கறிகள், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து சிறப்பாக கொண்டாடினர்.