கட்டாயப்படுத்தி பெண்களை ஆபாச படமெடுத்த கணவர்... ஷில்பா ஷெட்டி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்...!

Published : Jul 24, 2021, 02:23 PM IST

ஆபாச படமெடுத்த விவகாரத்தில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கூறியுள்ள வாக்குமூலம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

PREV
16
கட்டாயப்படுத்தி பெண்களை ஆபாச படமெடுத்த கணவர்... ஷில்பா ஷெட்டி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்...!


சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களையும், மாடல் அழகிகளையும் கட்டாயப்படுத்தி ஆபாச படமெடுத்ததாக பிரபல நடிகையின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். 
 

26

வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆடைகளை அகற்ற கட்டாயப்படுத்தி, ஆபாச படமெடுத்ததாகவும், அதனை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரதீப் பக்ஷியின் கென்ரின் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து விற்பனை செய்ததாகவும் ராஜ் குந்த்ரா மீது பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பியது. ஒரு படத்திற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் ராஜ் குந்த்ரா கோடிகளைக் குவித்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

36

ராஜ்குந்த்ராவுக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் கைது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷில்பா ஷெட்டி, உங்களை சுற்றிலும் எப்போதும் அலார்ட்டாக இருங்கள் என்பது போல் தெரிவித்திருந்தார். 

46

இந்த ஆபாச படம் தயாரித்த விவகாரத்தில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆபாச படமெடுத்த விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தொடர்புள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

56

இதுகுறித்த விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக எவ்வித ஆதாரங்களும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர். 

66

மேலும் விசாரணையில் தனது கணவர் ஒரு அப்பாவி, அவருக்கும் ஆபாச பட விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஷில்பா ஷெட்டி தெரிவித்ததாகவும், ஆபாச இணையத்தை தனது கணவருடைய உறவினர் தான் நிர்வாகித்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories